search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பள விவகாரம்"

    மாதம் தவறாமல் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் (ஏ.ஐ.சி.யூ.டி.) சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    மாதம் தவறாமல் சம்பளம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 43 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

    தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். முடக்கம் செய்யப்பட்டுள்ள பிரிவுகளை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு நேர மேலாண் இயக்குனரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் (ஏ.ஐ.சி.யூ.டி.) சார்பில் பாசிக் தலைமை அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பொருளாளர் தரணிராஜன், துணைத் தலைவர்கள் முத்து நாயுடு, பாலமுருகன், துணை செயலாளர்கள் கோவிந்த ராசு, மூர்த்தி, இருசப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏ.ஐ.சி.யூ.டி. தலைவர் அபிஷேகம், பொதுச் செயலாளர் தினேஷ் பொன்னையா, செயலாளர் சேது செல்வம், துணைத் தலைவர் அப்துல்லா கான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    ×